பொதுப் பள்ளிகளுக்கான வெட்டுக்கள் குழந்தைகளைப் பாதிக்கின்றன - இப்போதே பேசுங்கள்!

ஒவ்வொரு குழந்தையும் ஒரு சிறந்த கல்விக்கு தகுதியானவர், அது அவர்களுக்கு வாழ்க்கையில் சிறந்த தொடக்கத்தை அளிக்கிறது. ஆனால், நம் குழந்தைகளுக்குத் தேவைப்படும்போது முதலீடு செய்வதற்குப் பதிலாக, ஃபோர்டு அரசாங்கம் அரசுப் பள்ளிகளுக்கான நிதியைக் குறைத்துக்கொண்டே இருக்கிறது.

வெட்டுக்களின் விளைவாக, இந்த ஆண்டு ஒவ்வொரு குழந்தைக்கும் $1200 குறைவாக நிதி உள்ளது.

அந்த வெட்டுக்களின் தாற்பரியம்:

 பள்ளிகளில் குறைவான கல்வியாளர்கள் மற்றும் துணை ஊழியர்கள்

அதிக நெரிசலான வகுப்பறைகள் மற்றும் குழந்தைகளுக்காக ஒருவருக்கொருவர் எனும் அடிப்படையில் செலவிடப்படும் பிரத்தியேக நேரத்தில் குறைப்பு

❌ தேவைப்படும் குழந்தைகளுக்கு வழிகாட்டுதல் ஆலோசனை போன்ற ஆதரவுகள் இல்லை

❌ வகுப்பறை தொழில்நுட்பத்திற்கான அணுகல் குறைவு 

❌ தாமதமான பள்ளி பழுது மற்றும் நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட கட்டிடங்களை விற்க பள்ளி வாரியங்களை கட்டாயப்படுத்துகிறது

நிலைமை தீவிரமானது. எடுத்துக்காட்டாக, 95% தொடக்கப் பள்ளிகளில் போதுமான மனநல உதவிகளை வழங்க முடியாது. 60,000 குழந்தைகள் ஆட்டிசம் ஆதரவிற்காக காத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு குழந்தைக்குமான நிதியில் $1200 காணாமல் போனது உண்மையான விளைவுகளை ஏற்படுத்தும்.

நாம் பேசும்போது மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். 

பிரச்சாரத்தை ஆதரிக்கவும், வெட்டுக்களுக்கு எதிராகப் பேசவும் இப்போதே பதிவு செய்யுங்கள்.